யாழில் பிறந்து நான்கு நாள் ஆன குழந்தை உயிரிழப்பு! நடந்தது என்ன?

பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

துன்னாலை மேற்கு கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை வீட்டில் இருந்தபோது நேற்று (16) வாந்தியெடுத்துள்ளது. இதனை அவதானித்த பெற்றோர் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணம் பேதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிலமணி நேரங்களில் குறித்த ஆண்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்த இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறோம்குமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post