யாழில் விபத்து! ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் வான் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கணவனைப் பிரிந்து வாழும் தாயார் 3 பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் பிள்ளையை இழந்த நிலையில் மற்றுமொரு மகனை இழந்து தவிக்கின்றார்.
இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ராஜா பிளாசா வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் ஜீவன் அபிசரன் (வயது-04) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவன் தனது வீட்டுக்கு முன்பாக உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரின் தாயார் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தாய் அழைத்தையடுத்து சிறுவன் வீட்டை நோக்கி வீதியைக் கடக்க ஓடிச் சென்றுள்ளார்.

அப்போது வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த வான் மோதி படுகாயமடைந்தார். சிறுவன் உடனடியாக தெல்லிப்பளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் சிறுவன் நேற்றிரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த இறப்புத் தொடர்hபாக விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

இந்த விபத்துச் சம்பவம் தெடார்பில் வாகன சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

மருத்துவரின் வாகனத்தை அவரது சகோதரர் எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக மன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த மல்லாக மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, சாரதியை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இதேவேளை கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் தாயார் தனது மூன்று பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இறந்து விட்டது. இச் சிறுவனும் உயிரிழந்துள்ளார். தற்போது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையுடன் தாயார் கணவனைப் பிரிந்த நிலையில் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post