கட்டுக்கடங்காது அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! 18 பேர் பாதிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியிலிருந்து நாடு திரும்பி மட்டக்களப்பு எல்லைப் பகுதியான கண்டகாடு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட 7 பேருக்கே வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் 133 கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 17 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 10 தடுப்பு நிரையங்களில் ஆயிரத்து 500 பேர் தங்க வைத்து கண்காணிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post