இல்-து-பிரான்சுக்குள் ஒரே நாளில் வந்து குவிந்த கொரோனா நோயாளிகள்!

பிரான்சில் தற்போது 3 ஆயிரத்து 661 கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றில் நேற்று ஒரே நாளில் 800 தொற்றுக்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கொரோனா தொற்று இதுவரை இரு மாகாணங்களில் அதிகமாக தொற்றியுள்ளது. முதலாவது இடத்தில் Grand Est மாநிலமும், அதன் பின்னர் இல்-து-பிரான்சும் உள்ளன.

இல்-து-பிரான்சில் நேற்று ஒரே நாளில் 250 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 900 தொற்றுள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.

தவிர, இவர்களில் 350 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இத்தகவலை இல்-து-பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS Ile-de-France) அறிவித்துள்ளது.
Previous Post Next Post