யாழில் கொரோனா சந்தேகநபர்கள் மூவருக்கு தொற்று இல்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேரில் மூவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் மன்னாரில் இருந்து அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தைக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

கொரோனா தொற்று அதிகரிக்காதமை அனைவருக்கும் நல்ல செய்தியாக இருப்பினும் இப்பகுதியில் கொரோனா அபாயம் நீங்கி விடவில்லை. மேலும் எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை இன்னும் தாண்டி விடவில்லை என்பதை நாங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை தொடர்ந்தும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் அரசாங்கத்தினதும் சுகாதார திணைக்களத்தினதும் அறிவுறுத்தல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.- என்றார்.
Previous Post Next Post