ஊரடங்குச் சட்டம் அமுல்! அதிகளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெண்கள்!!

நாட்டில் கொரோனாத் தொற்றைத் தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொழும்புப் பகுதிகளில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.

வழமையாக தேசிய வைத்தியசாலைக்கு வரும் விபத்துக்கள் தொடர்பானவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைந்துள்ளது.

எனினும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக காயமடைந்த பெண்களின் தொகை அதிகமாக உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் இணைப்பாளர் புஸ்பா ரமணி டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சராசரியாக விபத்து தொடர்பில் 250 சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாவது தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவார்கள். எனினும் நேற்று 60 சம்பவங்கள் மாத்திரமே பதிவானதாக புஸ்பா குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post