யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் வசித்துவந்த குறித்த பெண்ணின் நெருக்கத்துக்குரியவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் குறித்த பெண்ணும் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

குறித்த பெண்ணுக்கு உடல்நிலைப் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.

இருந்தபோதிலும் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கும் முன்பாகவே அவர் உயிரிழந்திருக்கின்றார்.

அவருடைய மரணம் கொரோனாவால் நிகழ்ந்ததா? என்பது குறித்த முடிவுகள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னரேயே வெளிவரும் என்று தெரியவருகிறது.

குடும்பத்தார் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருப்பதால் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.
Previous Post Next Post