கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்! அறிவிக்கப்பட்டது பொதுத் தேர்தல் திகதி!!

இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கையொப்பமிட்டு, அரச அச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன்மூலம் பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிலை இல்லாமல் போகும்.

எனினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை காபந்து அரசாக தொடர்ந்து பதவி வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post