பிரான்ஸைப் புரட்டிப் போடும் கொரோனா! ஒரே நாளில்1417 பேர் உயிரிழப்பு!!

உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

அந்தவகையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்ஸில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகளவிலான உயிரிழப்புக்களை கொண்டிருந்த இத்தாலியில் அண்மை நாட்களாக உயிரிழப்புக்கள் குறைந்துவரும் நிலையில் சில நாட்களாக பிரான்ஸில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நேற்று 7ம் திகதி ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 417 உயிரிழப்புக்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்தையும் முடக்கிய போதிலும் பிரான்ஸில் இவ்வாறு உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றமை அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளன.

இதுவரையில் உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 058 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post