கொரோனா வைரஸ் தொற்று! யாழ்.நெடுந்தீவைச் சேர்ந்த பெண் பிரான்ஸில் உயிரிழப்பு!!

உலக நாடுகளில் அதிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், அங்கு புலம்பெயர்ந்திருக்கும் ஈழத் தமிழர்களையும் பாதிப்புள்ளாக்கி வருகின்றது.

அந்தவகையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும், உறுப்பினருமாகிய பாலச்சந்திரன் நாகலிங்கத்தின் துணைவியாராகும்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் இதுவரையில், ஒரு இலட்சத்து 17ஆயிரத்து749 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்இ 12 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post