லண்டனில் சுப்பர் மார்க்கெட் உரிமையாளரான யாழ். குடும்பஸ்தா் கொரோனாவுக்குப் பலி!

(சியாமளன்)
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் யாழ்.மீசாலையைச் சோ்ந்த குடும்பஸ்தா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளாா்.

உயிரிழந்தவருக்கு இரண்டு வயது மற்றும் ஆறு மாதத்தில் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(சியாமளன்)

இதேவேளை பிரான்ஸில் யாழ்.காரைநகரைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸில் வசித்து வந்த நித்தி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் நித்தியானந்தம் (வயது-52) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இதேவேளை பிரான்ஸ் மற்றும் லண்டனில் கொரோனா வைரஸ் தொற்றினால் பெருமளவு புலம்பெயர் தமிழர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(சுப்பிரமணியம் நித்தியானந்தம்)Previous Post Next Post