யாழில் ஒரு கிராமத்தின் எல்லையை முற்றாக மூடிய இளைஞர்கள்! (வீடியோ)

யாழ்.வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிராமத்தின் எல்லையில் இளைஞர்கள் வீதி மறியலிட்டு கிராமத்தைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கிராமத்தை விட்டு வெளியே அத்தியாவசியத் தேவைக்காகச் செல்பவர்கள், மீண்டும் திரும்பி வரும் போது கைகளைக் கழுவி சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். வெளியாட்கள் உட்செல்ல அனுமதிக்கவில்லை.

உலக நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையிலும் அதிகமாகப் பரவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே அப் பகுதி இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post