இலங்கையில் சில மாவட்டங்கள் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது!

இலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து ஏனை பகுதிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய சிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகமான அடையாளம் காணப்பட்ட கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம், களுத்துறை ஆகிய பகுதிகள் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post