பிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வசாவிளானைச் சேர்ந்த பிரான்ஸ் .. இல் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் குறித்த குடும்பஸ்தர் சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தையா மகாதேவன் (வயது-61) என்ற குடும்பஸ்தரே நேற்று (05) அதிகாலை பிரான்ஸில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக ஒரு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ் செயற்பாட்டாளர் சிறி அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post