கனடாவில் திடீரென வீதியில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு! (வீடியோ)

கனடாவின் பரபரப்பான நெடுஞ்சாலையொன்றில் இயந்திரக் கோளாறிற்குள்ளான விமானமொன்று தரையிறங்கிய பரபரப்பாக சம்பவம் நடந்துள்ளது.

விமானம் திடீரென தரையிறங்கியதால், வாகன சாரதிகள் திகைப்படைந்தனர். நேற்று (16) இந்த சம்பவம் நடந்தது.

கியூபெக் சிட்டி சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கேயுள்ள, நெடுஞ்சாலை 40 இல் சிறிய ரக விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்ததால், நெடுஞ்சாலையிலேயே விமானத்தை தரையிறக்கும் முடிவை விமானி எடுத்தார்.

மாத்தியூ லெக்லெர்க் என்ற நபர் இதை காணொலியாக படம் பிடித்தார். நெடுஞ்சாலையில் பல கார்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரில் விமானம் தரையிறங்கியதால் கார்ச் சாரதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

எனினும் யாரும் நிலைகுலைந்து விபத்திற்குள்ளாகாமல் நிதானமாக செயற்பட்டதால் எந்த அசம்பாவிதமும் நேரவில்லை.
Previous Post Next Post