பிரான்ஸில் மீண்டும் ஒரு பெரும் இழப்பை ஈழத்துக்குத் தந்தது கொரோனா! (வீடியோ)

ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர், 1947ம் ஆண்டு அங்கேயே தனது நாடகத்தை அரங்கேறினார்.

கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் நாடகக் கலையை பயின்ற இவருக்கு தேரோட்டி மகன் நாடகம் பெரும் புகழ் ஈட்டிக்கொடுத்தது. பல மேடை நாடகங்களில் நடித்த இவர் கடமையின் எல்லை என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலாக நடித்திருந்தார்.

ஈழத்தின் நான்காவது திரைப்படமான நிர்மலாவை , இவரே தயாரித்து நடித்தார்.கொழும்பில் அரச பணியில் இருந்தவர் தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி புதியகாற்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.  தெய்வம் தந்த வீடு திரைப்படத்தில் நாயகனாகவும் தோன்றினார்.

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவர், அங்கும் நாடகம்-திரைப்படம் என்பனவற்றில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post