இந்தியப் பொலிஸாரைப் பின்பற்றிய இரு இலங்கைப் பொலிஸாருக்கு நடந்த கதி! (வீடியோ)

கொழும்பு டார்லி வீதியில் நேற்று ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியப் பொலிஸாரின் பாணியில் செயற்பட முனைந்த குறித்த இருவர் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post