உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் பரிதாப மரணம்! (படங்கள்)

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் இன்று அதிகாலை ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை வயலுக்குச் சென்ற உழவு இயந்திரம் தடம் புரண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில்  முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவாா்.

இதேவேளை இறுதிப்போரின் போது குறித்த இளைஞனின் தந்தை மற்றும் தங்கை உயிரிழந்துள்ளதுடன், தாயாருடன் வாழ்ந்து வந்திருந்தாா்.

இன்று அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் தாயார் தனியாக தவிக்கும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருப்பதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Previous Post Next Post