யாழில் மது அருந்த சிறுவனை மிரட்டிப் பணம் கேட்டவருக்கு மக்கள் வழங்கிய தண்டனை!

மது அருந்துவதற்காகச் சிறுவனை மிரட்டிப் பணம் கேட்ட நபர் மீது அப் பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், மட்டுவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. 

இதில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த மகேந்திரன் முரளிதரன் (வயது-36) என்பவரே படுகாயமடைந்தார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கொரோனா தொற்றின் பின்னர் அந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றின் அருகில், அந்த விற்பனை நிலைய உரிமையாளரும், இன்னொருவரும் மது அருந்தியுள்ளனர்.  16 வயதான பாடசாலை மாணவனொருவர் அந்த வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.

அந்த சிறுவனிடம் மது அருந்த பணம் தருமாறு ஒருவர் கேட்டுள்ளார். நேற்றைய தினமும் சிறுவனின் பணத்தை அவர் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று சிறுவன் பணம் கொடுக்க மறுத்தபோது, கத்தியால் சிறுவனை தாக்க அவர் முயன்றுள்ளார். சிறுவன் தடுக்க முயன்றபோது கையில் காயமடைந்தார்.

சிறுவன் காயமடைந்ததை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு, பணம் கேட்டு மிரட்டியவரை நையப்புடைத்துள்ளனர். இதன்போது அவரது தலையில் பெரும் வாள்வெட்டு காயமும் ஏற்பட்டது. நடு வீதியில் அவரரு மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டது.

அதிக இரத்த பெருக்குடன் அந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
Previous Post Next Post