நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டு நாள் ஊரடங்கு!

கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை வரை தொடரும். ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நாளைமறுதினம் (மே 24) ஞாயிற்றுக்கிழமை மறுநாள் 25ஆம் திகதி திங்கட்கிழமை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை (மே 23 சனிக்கிழமை) இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் 26ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாவட்டங்களில் வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே ,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முந்தைய அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மாறாமல் உள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post