பிரான்ஸ் அரசின் இரண்டாம் கட்ட அறிவிப்பு! உணவகங்களில் பணிபுரியும் தமிழர்களின் நிலை என்ன?

தமிழர்கள் அதிகளவில் உணவகங்களில் பணிபுரிகின்ற இல்-டு-பிரான்ஸ் பிராந்தியத்தில் வெளி இருக்கைகள் உள்ள உணவகங்கள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க நீக்கத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் எடுவார்ட் பிலிப் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு விபரங்களை அறிவித்திருந்தனர்.

யூன் 2 முதல் யூன் 21 வரை இரண்டாம் கட்டமென அறிவிக்க்பட்டுள்ளதோடு, யூன் 22 பின்னராக கட்டம் மூன்றென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழுகின்ற தலைநகர் பரிசினை மையப்படுத்திய இல்-டு-பிரான்ஸ் பகுதி வைரஸ் தாக்கத்தில் இருந்து சிவப்பு மண்டலமமாக இருந்து செம்மஞ்சலாக இறக்கம் பெற்றுள்ளது.

வைரசின் தாக்கம் மிகக்குறைவாகவுள்ள பச்சைப் பகுதிகளில் முழுiமாக உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு மேசையில் பத்துப் பேர் தாண்டாமல் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மேசைக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளி அவசியம் என்பதோடு, பணியாளர்களுக்கு சுவாசக்கவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது.

ஆனால் செம்மஞ்சளாக அடையளப்படுத்தப்பட்டும் இல்-டு-பிரான்ஸ் உட்பட (Grand-Est, Auvergne-Rhône-Alpes, Hauts-de-France) இப்பிராந்தியங்களில் உணவகங்களின் வெளி இருக்கை உள்ள உணவகங்களே திறக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி இருக்கைகள் மற்றும் உணவு வாங்கிச்செல்லுதல் வசதி கொண்ட உணவகங்களில் தொழில்புரிவோரில் ஒரு தொகுதியில் மீள பணிக்கு செல்ல வேண்டியுள்ளனர்.

மிகுதிப்பேர் கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளும் நிலையில் காணப்படுகின்றனர். இந்ந நிலைமை யூன் 21ம் திகதி வரை இருக்கும். மேலும் இன்றைய அறிவிப்புக்களில் தெரிவிக்கப்பட்டதாவது,

- செம்மஞ்சள் பகுதி உட்டப நாடுமுழுவதும் அனைத்து கொலேஜ்களும் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- 21ம் திகதி வரை பொது இடங்களில் பத்துப் பேரிற்கு மேல் கூடுவது தொடர்ந்தும் தடைசெய்யப்படுவதோடு, சுகாதார நடைமுறைகள் பேணமுடியாத பாதுகாப்பற்ற உள்ளக இடங்களிலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - இதுவரை வாகனப் போக்குவரத்துக்கான 100முஆ சுற்றுவட்டாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவதோடு, பிரான்ஸ் முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும்.

- டிஸ்னிலாண்ட் , அஸ்தெரிக்ஸ் போன்ற அனைத்துப் பொழுது போக்குப் பூங்காக்கள், பொதுப்பூங்காக்கள் அனைத்தும் நாடுமுழுவதும் திறக்கப்படுகின்றன.

- திரையரங்குகள் யூன் 22 இல் இருந்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அருங்காட்சியகங்கள், பாரம்பரியச் சின்னங்கள் அனைத்தும் யூன் 2ம் திகதியிலிருந்து திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

- உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சற் தடாகங்கள் செம்மஞ்சள் பகுதியான இல்-து-பிரான்சில் யூன் 22ம் திகதி திறக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பச்சைப் பகுதிகளில் யூன் 2ம் திகதி திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யூன் 15இல், ஐரோப்பிய எல்லைகளைத் திறப்பதற்குப் பிரான்ஸ் விரும்புகின்றபோதும், அனைத்து ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புக்கு அமைய இதன் முடிவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post