“என் ஆத்மா புருசனுக்காக இறுதியாகப் பேசுகிறது” கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்த பெண்!

மட்டக்களப்பு போரப்தீவுபற்று பிரதேச செயலகத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கடந்த 13ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சரண்யா (25) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவா் ஆவாா்.

அவரது கணவர் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், கணவன்- மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக சச்சரவுகள் இருந்து வந்ததாகவும், மனைவியைக் கணவன் சந்தேகப்பட்டு பேசியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உயிரை மாய்ப்பதற்கு முன்னர் அந்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் கணவன்மார், குடிகார கணவன்மார், மனைவியரை சந்தேகப்படும் கணவன்மாரை சிந்திக்க வைக்கும் விதத்தில் அவரது கடிதம் அமைந்திருந்தது.

அந்த கடிதத்தில்,

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் உயிரோடு இருந்து எதுவும் சாதிக்க போவதில்லை. அப்பவே சாக வேண்டிய நான் இன்னும் இருந்து என்ன செய்றது. எல்லோரும் நான் சந்தோசமா இருக்கேன் எண்டுதான் நினைப்பிங்க. நான் சந்தோசமா இல்லை. வாழ்க்கை நிம்மதியா வாழனும் என்டுதான் நினைச்சன். வாழமுடியல்ல. எல்லோரும் நல்லா இருக்கனும் என்டு நினைச்சன். எனக்கு கடவுள் நிம்மதியான வாழ்க்கையை குடுக்கல.

எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல. கிடைச்ச புரிசனும் சரியில்ல. இப்படி கேவலபட்டு வாழ்றது அவசியமில்ல. ஒரு தரம் இரண்டு தரம் என்றால் பொறுத்து போகலாம். இது வாழ்க்கை புள்ளா நீடிக்க போகிறது. இப்படி வாழ்க்கை வேணாம் என்டு அம்மா இருக்கிற இடத்துக்கு நானும் போறன். என்ன தேவல்லாத யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.

இது நான் சுயமாக எடுத்த முடிவு.

என் ஆத்மா என் புருசனுக்காக இறுதியாக பேசுகிறது...

நீ மது அருந்து விட்டு செய்த செயலால் இன்று இந்த உலகை விட்டு சென்று விடுகிறேன்..கனவில் கூட நினைத்திருக்கமாட்டாய். என்னை பற்றி தெரியாத நிறைய பேரின் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டாய்… திருமணம் முடிக்க முதலோ பிறகோ நான் சந்தோஷமாக இருந்தது கிடையாது.

நான் உன்னிடம் குடிக்க வேண்டாம் என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை..அளவாக குடிக்க சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை.. அளவுக்கதிகமாக குடித்து தினமும் பிரச்சனை செய்தாய். சந்தேகபடும் வார்த்தைகளை உதித்தாய். உன் குடிக்காவும் சந்தேகத்துக்காகவும் எனது உயிரை துறந்தேன்.

உன்னை திருத்தவே நான் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது.. என்னுடைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடுவராது.. நான் கோவத்தினாலும் பிடிவாதத்தாலும் விளையாட்டாக கோழைத்தனமாக எடுத்த முடிவால் நிறையபேரின் கேளிக்கைக்கு ஆளானேன்..

எல்லாத்துக்கும் காரணம் இந்த குடிதான்..குடி குடியை கெடுக்கும் என்பார்கள் இப்போது எனக்கு குடியே இல்லாமல் ஆக்கிவிட்டாய்.. இப்போது சந்தோசம் தானே. நீர் உன் அம்மாவோடும் உன் அக்காவோடும் சந்தோசமாக இருங்கள்.

ஏன் என் ஒன்று விட்ட அக்காவை உன் அண்ணன் என் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.

சரி அது ஒருபுறம் இருக்கட்டும் உன் அம்மாவையும் அக்காவையும் பிறகு உன்னிடம் சொல்கிறேன். அளவுக்கு மீறியதால் உன் குடியே என் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது.

நான் எவ்வளவு சந்தோசமாக வாழவில்லை யென்றாலும் உயிரோடு வாழ்ந்திருப்பேன்? உலை வாயை மூடலாம்..ஊர் வாயை மூட முடியாது..தவறு செய்தது நீ. அதற்கு நான் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொள்.. கழுத்தில் தூக்கு மாட்டி விட்டு உன்னை தொலைபேசியில் கூப்பிட்டு இனி இப்படி செய்தால் தூங்கி செத்திருவேன் என்று ஒரு வார்த்தை சொன்னேன். அந்த குடி சனியனை தூக்கி போட்டு விட்டு சந்தோஷமாக வாழலாம் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு கூட உன் குடி எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை கடவுளும் கொடுக்கவில்லை. நீயும் கொடுக்கவில்லை.

யார் என்ன சொன்னாலும் என் வாழ்க்கையை யாரும் வாழ போறதில்லை. நானே..திசைமாறி போன வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும்.. மீதி காலம் முழுவதும் என் அம்மோவோடு வாழ சந்தோஷமாக செல்கிறேன்.

வெளிநாட்டில் வாழும் குடிகார கணவன்மாரே உங்கள் மனைவி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. அப்படி என்றால் உங்கள் மனைவியுடன் இருங்கள். உங்கள் மனைவியினை தனியாக விட்டுவிட்டு நீங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு என் கணவர் போல் சந்தேகங்களோடு சம்பாதிக்கின்ற பணம் எங்களுக்கு வேண்டாம்.

குடிகார கணவர்மார் நிறைய பேருக்கு நான் ஒரு சிறந்த உதாரணமாகவும் படிப்பினையாகவும் இருப்பேன். அன்பு புருஷா நீ இல்லாத வேளையிலும் எனது இறுதிச்சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடத்திய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். உன்னை பற்றி என்ஆன்மா மீண்டும் எழுதும்.


Previous Post Next Post