மாமனாரின் முச்சக்கரவண்டியைப் பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய மருமகன்!

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீ வைத்துக்கொளுத்திய மருமகனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் இன்று மாலை உத்தரவிட்டார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மாமனாருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பெற்றோல் ஊற்றி எரித்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று மாலை குறித்த சந்தேக நபர் கபாத்தான்குடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சி.சி.ரி.வி. கமெராவின் துணையுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவரை விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post