யாழ்.உரும்பிராயில் விபத்து! டிப்பர் சில்லுக்குள் நசியுண்ட மோட்டார் சைக்கிள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் உரும்பிராய்ச் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிா்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளானவர் பயணித்த மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்படுள்ளதுடன் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.  எனினும் குறித்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இவ் விபத்துச் சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
Previous Post Next Post