மண்டைதீவு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆனி உத்தர திருமஞ்சன மகா அபிஷேகம்!

சுபமும் சுகமும் அருளும் திருவெண்காட்டில் இந்திரன் ஐராவதம் (வெள்ளை யானை), பிரம்மா, விஷ்ணு, சிவப்பிரியர் முதலானோர்கள் நடாத்தும் ஆனி உத்தர திருமஞ்சனம் (மகா அபிசேகம்) எதிா்வரும் ஞயிற்றுக்கிழமை (28.06.2020)  அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்பது அருளாளர்களின் சொல் வாக்கு.

ஆனித் திருமஞ்சனத்தின் போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம்.

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது.

அதனால் அபிசேகத்திற்கு செல்லும்போது எங்களால் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள்.

அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

'வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும், இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள்.

ஆனி மாதத்தை நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு.

இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். இந்த ஆனி உத்திரமே ஆடலசரனுக்கான ஆனி திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது.

Previous Post Next Postஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்