இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்தார்.



