யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் காதல் தோல்வியால் தற்கொலை!

சிலாபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மாதம்பை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் காதல் தொடர்பாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலைய பகுதியிலுள்ள மரத்தில் குறித்த கான்ஸ்டபிள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டவரின் சடலம் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய திருமணமாகாத கானஸ்டபிள் எனவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவரது கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி:- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாதம்பையில் பலி!
Previous Post Next Post