வெளிநாடு ஒன்றில் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டு! இலங்கை தமிழ் இளைஞனுக்கு புகலிடம் மறுப்பு!!

நியூசிலாந்தில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழ் இளைஞனின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 33 வயதான இளைஞனின் புகலிட கோரிக்கையை நியூசிலாந்து தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது.

நியூசிலாந்தில் பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நாணய பரிமாற்றம் செய்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்தபோது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், இலங்கைக்கு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வாதிட்டார்.

எனினும் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் அவர் 2013 ஆம் ஆண்டில், கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் உள்ளூர் அதிகாரிகளுக்கு பணம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் 2014ஆம் ஆண்டு கல்வி விசாவில் நியூசிலாந்திற்கு சென்ற நிலையில் புகலிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Previous Post Next Post