முல்லைத்தீவில் திடீரென வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்! உயிர் தப்பிய தாயும் மகனும்!! (வீடியோ)

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் உந்துருளியில் (மோட்டார் சைக்கிள் கொண்டிருந்த போது, வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அந்த உந்துருளி தீப்பற்றிக் கொண்டுள்ளது.

ஒட்டுசுட்டான் - கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள கொங்கிறீட் வீதியில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கான உந்துருளி ஒன்றில் தாயார் தனது மகனை ஏற்றி ஓடிக்கொண்டு வரும்போது மோட்டார்சைக்கிளில் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக்கொண்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் பயணித்த தாயும் மகனும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
Previous Post Next Post