
குறித்த குளத்தைச் சுற்றி அழகுபடுத்தி, நடபாதை அமைத்து மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது நல்லூர் பிரதேச சபை.
நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரனின் வேண்டுகோளுங்கிணங்க அவருக்கென ஒதுக்கப்பட்ட 3.4 மில்லியன் ரூபாய் சபை நிதியில் இவ் வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மக்கள் ஓய்வெடுக்கக் கூடியவாறும், நடைப் பயிற்சியில் ஈடுபடுவதற்குமான ஒழுங்கில் வடிவமைக்கப்பட்டு வருவதுடன், இரவு வேளைகளில் ஒன்றுகூடும் மக்களுக்கென குளக்; கரையினைச் சுற்றி சுமார் 10 ற்கும் மேற்பட்ட மின்விளக்குகளும் பொருத்தப்படவுள்ளன.
அத்துடன் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்பம்சங்களைக் காட்சிப்படுத்தும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.