இலங்கையை மீண்டும் உலுக்கும் கொரோனா! மேலும் 196 பேருக்குத் தொற்று!!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ மருத்துக நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் கோரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே ய கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை கைதியுடன் மூன்று மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அடங்கலாக 338 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு மேற்கொள்ளக்கூடிய பிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post