ஜூலை 24 முதல் பிரித்தானியாவில் இது கட்டாயம்: மறுத்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

பிரித்தானியாவில் ஜூலை 24 முதல் கடைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஏற்கனவே பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்னும் விதி ஜூன் 15 அன்று அமுலுக்கு வந்துவிட்டது.

தற்போது கடைகளுக்கு ஷாப்பிங் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை மாஸ்க் அணிந்து வருமாறு பரிந்துரைக்கலாம், ஆனால் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அனுமதியில்லை.  பொலிசாருக்குத்தான் அந்த உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.


கடைகளில் மாஸ்க் அணியாதவர்களைக் கண்டால் உடனடியாக அந்த இடத்திலேயே அவர்களுக்கு அபராதம் விதிக்க பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

இரண்டாவது கொரோனா அலையைத் தடுக்கும் நோக்கில் கடைகளில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட இருக்கும் அபராதம் 100 பவுண்டுகள் ஆகும்.

சிறுவர்களுக்கும் குறிப்பிட்ட சில உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்களுக்கும் மாட்டும் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்களிக்கப்படும். மருத்துவமனைகளில் ஊழியர்கள் அணியக்கூடிய மாஸ்குகளை பொதுமக்கள் அணியவேண்டிய அவசியம் இல்லை, சாதாரணமாக பயன்படுத்தப்படும் துணியாலான மாஸ்குகளை அவர்கள் அணிந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post