சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் சிறைபிடிப்பு! யாழ்.வடமராட்சியில் பதற்றம்!!

கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்துடன் வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து கற்பிட்டி மீனவர்கள் உடுத்துறை மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் உடுத்துறை கடற்பரப்பில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கடலட்டை பிடிப்பதற்காக என வடமராட்சி கிழக்கில் வாடிகளை அமைத்து தங்கியிருக்கின்ற புத்தளம், மன்னார் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் டைனமற் உட்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டிவந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நடுக்கடலில் வைத்து கற்பிட்டி மீனவர்களை சிறைப்பிடித்து அவர்களை கரைக்கு கொண்டுவந்ததாகவும் இருந்தபோதிலும் உடனடியாக கடற்படையினரோ பொலிஸாரோ தலையிடவில்லை என்று தெரியவருகிறது.
Previous Post Next Post