பல ஆண்களுடன் தொடர்பு! உல்லாச வாழ்க்கை!! கணவனைப் கொலை செய்த மனைவி!!!

தமிழகத்தில் கணவனை கூலிப் படை வைத்து கொலை செய்ததை இலங்கையை சேர்ந்த பெண் ஒப்புக் கொண்ட நிலையில், அது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப்(45). தாய், தந்தையை இழந்த இவர் குவைத் நாட்டில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.

அங்கு தன்னைப் போலவே தாய், தந்தையை இழந்து தனியாக வசித்து வந்த, இலங்கையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க, அசிலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


யூசுப்-அசிலா கை நிறைய பணம் சம்பாதித்த இருவரும், குவைத்தில் இருந்து தமிழத்தின் தஞ்சாவூருக்கு திரும்பியுள்ளனர். அதன் பின் இங்கு அடுக்கு மாடி வீடுகள், விவசாய பண்ணைகள் என சொத்துக்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

கடந்த 25-ஆம் திகதி வல்லம் அருகே நெடுஞ்சாலையில் யூசப் காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் சரமாரியாக ஓட ஓட வெட்டி கொலை செய்தது.

இது குறித்து வல்லம் பொலிசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை தொடர்பாக யூசப்பின் மனைவியை 25-ஆம் திகதி அசிலாவை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ஒரு கும்பலிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து கொலை செய்ய சொன்னதாக கூறினார்.

யூசப் இதையடுத்து பொலிசார் அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் பணம் வாங்கியது உண்மை தான் ஆனால் நாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.

அதன் பின் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கமெராக்களை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது அதில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் 6 பேர் கொண்ட கும்பல் சென்றது தெரியவந்தது. அவர்கள் திருச்சியில் உள்ள ஒரு கூலிப்படை என்பது தெரியவந்தது.

அந்த கூலிப்படையில் 26 வயது மதிக்கத்தக்க சகாதேவன், அவரது நண்பர் பிரகாஷ் உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் இரண்டு பேரையும் பொலிசார் பிடித்து விசாரித்த போது நாங்கள் தான் கொலை செய்தோம். அவரை கொலை செய்வதற்கு 12 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறினர்.

இதனால் பொலிசார் இந்த முறை அவரிடம் வாக்குமூலமாக கேட்டுள்ளனர். அப்போது அசிலா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதில் குவைத்தில் இருந்து திரும்பிய நாங்கள் இங்கு நிறைய சொத்துக்களை வாங்கினோம். நான் இலங்கையை சேர்ந்தவள் என்பதால் யூசப் பேரிலே அனைத்து சொத்துக்களும் வாங்கப்பட்டது.

எங்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம். அதன் பின் சிறிது காலத்திற்கு பின் அவர் குவைத்திற்கு வேலைக்கு சென்றார். நான் தஞ்சையிலே வசித்து வந்த போது சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.


இதைக் கேள்விபட்ட யூசப் உடனடியாக தஞ்சை திரும்பி, சொத்து பத்திரம், பணம் என அனைத்தையும் தனது பெயரில் தனியார் வங்கி லாக்கர் ஒன்றில் வைத்துவிட்டு மீண்டும் குவைத் சென்றார். இதனால் அந்த தனியார் வங்கி மேலாளரை தன்னுடைய வலையில் வீழ்த்தி யூசப் வங்கி லாக்கரில் இருந்த பணம், நகை போன்றவைகளை எடுத்து செலவு செய்து வந்தேன்.

இதை அறிந்த யூசப் மீண்டும் குவைத்தில் இருந்து தஞ்சைக்கு திரும்பி வங்கி மேலாளர் மற்றும் தன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் தான் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தேன்.


அதன் பின் திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தன் குழந்தைகளுடன் வசித்து வந்த போது யூசப் சொத்துக்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்று பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். யூசப் இறந்தால் சொத்துக்கள் அனைத்தும் தனக்கு கிடைக்கும் என்று சிலர் கூறியதால் நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து கூலிப்படையைக் கொண்டு கொலை செய்தேன் கூறியுள்ளார்.

 இதையடுத்து அசிலா, கூலிப்படையை சேர்ந்த சகாதேவன், பிரகாஷ் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையில் தொடர்புடைய மற்றவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.Previous Post Next Post