வனிதாவோட அந்த வீடியோலாம் இருக்கு... ரிலீஸ் பண்ணட்டா? கொந்தளித்த நாஞ்சில் விஜயன்

நடிகை வனிதா குடித்துவிட்டு கும்மாளம் போடும் வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன்.

நடிகை வனிதா மூன்றாம் திருமணம் செய்த நாளில் இருந்தே தொடர்ந்து அவர் தொடர்பில் எதாவது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. சூர்யாதேவி என்ற பெண் வனிதாவை கடுமையாக விமர்சித்ததால் கடுப்பான வனிதா இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

மேலும் சூர்யாதேவியும் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் விஜயனும் தன்னைப் பற்றி அவதூறு பேசுவதாக கூறினர்.இந்நிலையில் வனிதாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த நாஞ்சில் விஜயன், வனிதா தன்னைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதாக தெரிவித்தார்.

தற்போது மீண்டும் வனிதா குறித்து பேசிய நாஞ்சில் விஜயன், வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அதிகளவு சிகரெட் பிடிச்சாங்க. அதைப்பத்தி நான் ஏதாவது சொல்லியிருக்கேனா? பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னால் கூட வனிதா கேரவன்ல உட்காந்து மது குடித்துவிட்டு தான் போனாங்க.
அவங்கக்கிட்ட என்னை பத்தின ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க.

வனிதா குடித்துவிட்டு கும்மாளம் போட்ட வீடியோலாம் என்கிட்ட இருக்கு. நான் அதை ரிலீஸ் பண்ணட்டுமா என கேட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் தற்போது வனிதா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பகீர் கிளப்பியுள்ளது சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
Previous Post Next Post