கொரோனா பரவல்; ராஜாங்கணை பிரதேச தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்!

அநுராதபுரம் ராஜாங்கணை பிரதேச தபால்மூல வாக்களிப்பு மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன என்று அந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு ஏற்பட்ட கோரோனா தொற்றுக் காரணமாக ராஜாங்கணை பிரதேசத்தில் இன்று மட்டும் நான்கு பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே ராஜாங்கணை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் இந்த வாரம் இடம்பெறவிருந்த தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post