அதிகூடிய வேகத்தால் அநியாயமாக உயிரிழந்த இளைஞன்!! (படங்கள்)

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். திடீரென மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியோரமாக நின்ற நாவல் மரத்தில் மோதியுள்ளது என அவரோடு மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் கூறியுள்ளார்.


இந்த விபத்தின் போது வாகனத்தைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மற்றைய இளைஞர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த மோகன் றஜீபன் (வயது-19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவா் ஆவாா்.

இறந்தவரின் சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post