யாழில் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் தீ விபத்து! (வீடியோ)

யாழ் நகரில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து இன்று காலை இடம்பெற்றது. தீ விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முன்பக்கம் உள்ள மின் இணைப்பு சாதனங்களில் தீப்பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர்.

பின்னர் உடனடியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post