சித்திரத் தேரேறி அருள்பாலித்தாள் நயினை நாகபூசணித் தாய்! (படங்கள்)

அலைகடல் நடுவே அருளாட்சி புரியும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் வீதியுலா இன்று வெள்ளிக்கிழமை(03) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி அதிகாலை-05.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை-06.45 மணியளவில் சித்திரத் தேருக்கு அம்பிகை, விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் எழுந்தருளினர்.


சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டுத் தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-07 மணியளவில் முத்தேர் வீதியுலா ஆரம்பமானது.

நூற்றுக்கணக்க்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகிய முத்தேர் வீதி உலா காலை-08 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது.

இதேவேளை, கொரோனா நோய் நிலைமையைக் கருத்திற் கொண்தேக்கு தேர்இ சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாதுஎன முன்னர் தெரிவிக்க்கப்படடிருந்த போதும் இன்றைய தேர்த் திருவிழா சிறப்பாக நிறைவேறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post