பிரான்ஸில் இன்று முதல் பொருட்களின் விலைகளில் மாற்றம்! (விபரம் இணைப்பு)

சிகரெட் : இதுவரை 9.50€ வுக்கு விற்பனையான அநேக சிகரெட் பக்கட்டுக்கள் இன்று தொடக்கம் 9.60€ வாக அதிகரித்துள்ளது. புகைத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

எரிவாயு : எரிவாயுவின் விலை சற்றுக் குறைவடைந்துள்ளது. 0.3% வீதத்தினால் இது குறைவடைந்துள்ளது.


வேலை இல்லாதவர்களுக்கான தொகை அதிகரிப்பு : வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 0.4% வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 29.26€ ஆக இருந்த இந்தத் தொகையானது இன்று முதல் 29.38€ ஆக உயர்ந்துள்ளது.

எல்லைகள் திறப்பு : ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து பிரான்சுக்கு இன்று முதல் மக்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 15 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. l'Algérie, l'Australie, le Canada, la Géorgie, le Japon, le Monténégro, le Maroc, la Nouvelle-Zélande, le Rwanda, la Serbie, la Corée du Sud, la Thaïlande, la Tunisie et l'Uruguay ஆகிய நாடுகளே அவையாகும்.
Previous Post Next Post