யாழில் த.தே.ம.முன்னணியின் வேட்பாளர் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கைது!

வடமராட்சி பிரதேசத்தில் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவாளர்கள் நால்வர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நெல்லியடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நான்கு பேரையும் நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியோ பொலிஸார் பிணையில் விடுவித்தனர்.

வாகனத்தில் வேட்பாளர் இல்லாத நிலையில் அந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் அவரது படங்களை காட்சியப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வாகனத்திலிருந்து இறங்கி மக்கள் சந்திப்புக்கு சென்றிருந்த வேளை, அந்தப் பகுதியால் வருகை தந்த தேசியக் கட்சி ஒன்றின் ஆதரவாளர்களே நெல்லியடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

அவர்களின் தூண்டிதலையடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post