யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஓடிய இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (29) பிற்பகல் தென்மராட்சி, வரணி பகுதியில் இந்த விபத்து நேர்ந்தது.

மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள், நிலைதடுமாறி, வரணி வைத்தியசாலையின் வாயிலிற்கு எதிரில் அந்த பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் டிப்பர் வாகனத்துடன் மோதினர்.

அவர்களின் பின்னால் பொலிசாரும் வேகமாக வந்தனர். இளைஞர்களை தாம் விரட்டி வரவில்லையென்றும் தம்மை கண்டதும் தலைதெறிக்க ஓடிவந்து விபத்தில் சிக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர்கள் விபத்தில் சிக்கியதும் அந்த பகுதியில் வந்தவர்கள், இருவரையும் மீட்டு வைத்தியசாலைக்குள் கொண்டு சென்றனர். அந்த பகுதியால் வந்த ஒருவர், தானே வைத்தியசாலைக்குள் புகுந்து, தள்ளுவண்டியை இழுத்து வந்து இளைஞர்களை உடனே வைத்தியசாலைக்குள் கொண்டு செல்ல உதவினார்.

விபத்தில் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். இரண்டு இளைஞர்களும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post