யாழ்.திருநெல்வேலி வீதியில் மயங்கிக் கிடந்த முதியவர்! ஏற்றமால் திரும்பிச் சென்ற அம்புலன்ஸ்!!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீதியில் விழுந்து கிடந்த முதியவர் வைத்தியசாலைக்கு செல்ல சம்மதம் கூறவில்லை என கூறி அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல மறுத்து அம்புலன்ஸ் வண்டி திரும்பி சென்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் திருநெல்வேலி- சிவன் அம்மன் கோவிலடியில் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

குறித்த பகுதியில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் சிலர் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்து அதன் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து சுன்னாகம் பகுதியிலிருந்து அம்புலன்ஸ் வண்டி அங்குவந்துள்ளது. இதன்போது அம்புலன்ஸில் வந்த மருத்துவ ஊழியர் ஒருவர் மயங்கி கிடந்த முதியவரிடம் வைத்தியசாலை செல்லபோகிறீர்களா? என கேட்டிருக்கின்றார்.

அதற்கு அவர் சைகையில் ஏதோ கூறியதை தொடர்ந்து முதியவர் வைத்தியசாலைக்கு செல்ல விரும்பவில்லை எனவும் வைத்தியசாலை செல்ல விரும்பாத ஒருவரை நாம் எடுத்து செல்ல முடியாது எனவும் குறித்த மருத்துவ ஊழியர் கூறியுள்ளர்.

இதனையடுத்த யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தன்னை அறிமுகம் செய்ததுடன் முதியவரின் நிலை மோசமாக இருப்பதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அவருடைய ஒப்புதல் தேவையற்றது என கூறியிருந்தார்.  எனினும் முதியவரை ஏற்றாமல் அம்புலன்ஸ்வண்டி திரும்பி சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரியினால் சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதுடன், பிறிதொரு வாகனத்தில் முதியவரை ஏற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார்.
Previous Post Next Post