பிரான்ஸில் கொரோனாவின் இரண்டாவது அலை மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும்!

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மீளமுடியாத வகையில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்த பிரான்சின் புதிய பிரதமர் (Jean Castex) ஜீன் காஸ்டெக்ஸ், அதே சமயம் இரண்டாவது தேசிய அளவிலான பொது முழு முடக்கத்தை நிராகரித்துள்ளார்.

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் அர்த்தத்தில், பிரான்ஸை சாத்தியமான கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக தயார்படுத்தும் விருப்பம் உள்ளது என்று காஸ்டெக்ஸ் கூறினார்.



எவ்வாறாயினும், கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும், பொருளாதாரத்தின் மீதான தாக்கத்திற்கு எதிராக, பிரான்ஸ் மக்கள் சமாளிக்கக் கூடிய வகையில் சமநிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாம் இரண்டாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும், ஆனால் மார்ச் மாதத்தைப் போன்ற ஒரு பொது முடக்கத்தை அமுல் படுத்தமாட்டோம். ஏனென்றால் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மற்றொரு பொதுவான மற்றும் முழுமையான முடக்கத்தை நம்மால் தாங்க முடியாது என்று அவர் கூறினார்.



முந்தைய பிரான்ஸ் அரசாங்கம் மே 11 அன்று எச்சரிக்கையுடன் தளர்த்துவதற்கு முன்பு, சுமார் எட்டு வாரங்களுக்கு நீடித்த கடுமையான நாடு தழுவிய பொது முடக்கத்தை அமுல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் பிரான்சில் பொதுக்கூட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதாவது 5,000 பேர் கூடுவதற்கு தடை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post