சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்! மீறினால் வழக்கு!! நாளை முதல் நடைமுறைக்கு!!!

நாளை (ஜூலை 17) வெள்ளிக்கிழமை முதல் வீதிகளில் நடைபாதையில் வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

“நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவது சட்டத்துக்குப் புறன்பானது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் நாளைமுதல் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்டத்தை மீறி நடைபாதையில் வாகனத்தை தரித்து நிறுத்துவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
Previous Post Next Post