முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் கூறினர்.
Previous Post Next Post