யாழ்.நோக்கி வந்த பால் கொள்கலன் வாகனம் விபத்து! (படங்கள்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த பிரபல பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் பால் கொள்கலன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொள்கலன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post