நான் வென்றால் கோத்தபாய வென்றதாக அர்த்தமல்ல! மண்டைதீவில் அங்கஜன்!!

அங்கஜன் இராமநாதன் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொள்கிறார். அவர் வென்றால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வென்றதிற்கு சமன் என தமிழரசுகட்சியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியகருத்திற்கு அங்கஜன் இராமநாதன் பதில் வழங்கியுள்ளார்.

மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது நான்வென்றால் கோட்டபாய வென்றதிற்கு சமன் அல்ல, தமிழ் மக்கள் வென்றதிற்கே சமன் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் ஒரு விடயத்தை ஆணித்தனமாக கூறிகொள்கிறேன். அங்கஜன் இராமநாதன் வென்றால் மக்கள் வென்றதிற்கு சமன், அங்கஜன் இராமநாதன் வென்றால் தர்மம் வென்றதிற்கு சமன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றால் மக்கள் தோற்றதிற்கு சமன், மக்கள் ஏமாறியதிற்கு சமன்.

25 வருடங்கள் ஏமாற்றியது போதாதென்று இன்னும் ஏமாற்றும் தந்திரத்தை ஆரம்பித்துள்ளது தமிழ் தேசியகூட்டமைப்பு என்று தெரிவித்தார்.
Previous Post Next Post