வேகக் கட்டுப்பாட்டையிழந்த டிப்பர்! பயணிகள் பேருந்துடன் மோதி விபத்து!! (படங்கள்)

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்தின் மீது கிளிநொச்சி பகுதியில் இருந்து வேகமாக மண்ணுடன் வருகை தந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்தின் பின் பகுதியில் மோதியது.


இவ் விபத்தில் பேருந்தின் பின் புறத்தில் அமர்ந்து பயணித்த பயணி காயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை வாகனத்தின் மூலம் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதி பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.Previous Post Next Post