
“திருமண மண்டபம் அல்லது திருமண நிகழ்வு இடம்பெறும் இடத்தில் விருந்தினர்கள் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கவேண்டும்.
அனைத்து விருந்தினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீற்றராவது இட ஒதுக்கீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பத்தில் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 100ஆக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் அது 200 பேராக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்று ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் திருமண வைபவங்களில் அதிகபட்சம் 300 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.